ஈழமண்ணின் வரலாறு ஒரு கறைபடிந்த காவியமாகத்தான் இதுவரை வரையப்பட்டிருக்கிறது. தமக்கே உரித்தான தமது பாரம்பரிய பிரதேசத்தில் தமக்கென ஒர் அரசை அமைத்து, தமக்கே உரிய மொழி, மத, கலை, கலாச்சார பாரம்பரிய விழுமியங்களைப் பேணிப்பாதுகாத்து, பூரண இறைமையுடன் ஈழத்து தமிழ் மக்கள் 15ம் நூற்றாண்டின் இறுதிவரை அந்த மண்ணிலே மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும்வாழ்ந்து வந்தார்கள் என்பதை முழு உலகமும் அறியும்.
Friday, 7 June 2013
ஒப்பற்ற தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
ஈழமண்ணின் வரலாறு ஒரு கறைபடிந்த காவியமாகத்தான் இதுவரை வரையப்பட்டிருக்கிறது. தமக்கே உரித்தான தமது பாரம்பரிய பிரதேசத்தில் தமக்கென ஒர் அரசை அமைத்து, தமக்கே உரிய மொழி, மத, கலை, கலாச்சார பாரம்பரிய விழுமியங்களைப் பேணிப்பாதுகாத்து, பூரண இறைமையுடன் ஈழத்து தமிழ் மக்கள் 15ம் நூற்றாண்டின் இறுதிவரை அந்த மண்ணிலே மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும்வாழ்ந்து வந்தார்கள் என்பதை முழு உலகமும் அறியும்.
“விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல" வான் கரும்புலி கேணல் ரூபன்
சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி 20-02-2009 அன்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தான் தாக்குதலுக்கு போக முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதம் . “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலைவன் பாய்ச்சல்கள் தொடரட்டும், அலைகள் ஆர்ப்பரிக்கட்டும்.
1970ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி யாழ்ப்பாணத்தில் `தமிழ் மாணவர் பேரவை' தனது ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியது. திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசு தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதை தரப்படுத்தியதே அப்பேரணி நடத்துவதற்குக் காரணமாகும்
அதனை அடுத்து பாடசாலைகளுக்குச் சென்று விளக்கவுரை அளித்து வந்தேன். வல்வை-சிதம்பராக் கல்லூரியில் முதல் முதலாக தம்பியைப் பார்க்கிறேன். அடுத்து, வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் அவர் சார்ந்த இளைஞர்களுக்கு தமிழர் எதற்காக ஆயுதப்போராட்டத்தைத் தொடங்கவேண்டும் என்பதையும், சிங்களவர்களுக்கு முன்பே தமிழர்கள் இந்நாட்டின் பூர்வீக குடிகள் என்பதனையும், அவர்கள் தமது சுயநிர்ணய உரிமையை தாமாகவே நிலைநாட்டிக் கொள்ளவேண்டும் என்பதனையும் விளக்கினேன். இன்றைய தமிழ்த் தலைர்கள் மாவட்டசபை என்றும் மாகாண சபை என்றும் பேசுகிறார்கள். அதுவல்ல எமக்குத்தேவையானது.
Subscribe to:
Posts (Atom)






