Friday, 7 June 2013

தீவீரவாதிகளா விடுதலை புலிகள்! ஒரு சிறப்பு கண்ணோட்டம்.


விடுதலை புலிகள் பற்றி பல தரப்பு மக்களாலும் பலதரப்பு அரசியல் வாதிகளாலும் பல எழுத்தாளர்களாலும் எழுதப்பட்டாலும் அவர்களை பற்றி ஒரு சரியான புரிதல் இல்லாமல்தமிழ் பேசும் மக்கள் இன்றும் இருப்பது மிகவும் வேதனையான விடையமாகவே இருக்கின்றது .





தமிழ் பேசும் தமிழர்கள் நாங்கள் வேறு பட்டு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி கொண்டு இருப்பது உலக அரசியலுக்கும் மிதவாத கொள்கை உள்ள ஆளும் தரப்பிற்கும் சாதகமான ஒன்றாகவே இருக்கின்றது.



நாங்கள் எல்லோரும் விட்ட வரலாற்று தவறாக பலம் பொருத்திய ஆட்சி இருக்கும் போதே எமது உரிமையை வென்று எடுக்காதது தான். தலைவர் ஒரு தனிப்பட்ட மனிதனாக யாராலும் அவரின் மேல் குற்றம் சாட்ட முடியாது. ஒரு குடும்பத்துக்குள்ளேயே ஒவ்வொரு குழந்தைகள் ஒரு மாதிரி இருக்கும் போது அந்த பெரிய கட்டமைப்பில் சிலர் விட்ட தவறுகளால் விடுதலை போராட்டம் என்பது தீவிரவாதமானது என்றோ  இல்லை வன்முறையானது என்றோ நாம் வரையறுக்க முடியாது.



விடுதலை புலிகள் போல ஒழுக்க வாதிகள் எந்தவொரு கட்டமைப்பிலும் இல்லாததை உலகமே வியந்ததை நாம் அறிவோம்.



விடுதலை புலிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டாக இளம் வயதில் போராளிகள் என்பது தான். அது அரசாங்கத்தால் முன் வைக்கபட்ட குற்றசாட்டே தவிர ஆதாரபூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.



மேலைத்தேய நாடுகளிலேயே பதினாறு வயது தாண்டிய இளம் ஆண்களும் சரி பெண்களும் சரி நாட்டிற்காக இருவருடம் சேவை செய்ய வேண்டும் என்பது சட்டமாக இருந்தது . இப்போது அந்த சட்டம் வலுவுடையதாக இல்லாமல் இருந்தாலும் இப்போதும் விரும்பிய பதினாறு வயது நிரம்பிய ஆணும் பெண்ணும் நாட்டிற்காக இராணுவத்தில் தம்மை இணைத்து கொள்ள முடியும். அதே போல நமது ஈழத்திலும் விரும்பியவர்கள் தம்மை விடுதலை போராட்டத்தில் இணைத்து இருந்தால் அவர்கள் எப்படி இளம் வயது போராளிகள் ஆகா முடியும்.



அது போக பதின்நான்கு, பதின் மூன்று வயது குழந்தைகளால் எப்படி கனரக ஆயுதங்களை கையாள முடியும்?இது மிகவும் அடிப்படையில் ஆதாரமற்ற குற்ற சாட்டாகவே பார்கின்றேன்.



அடுத்ததாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட பெரிய குற்றச்சாட்டு தீவிரவாதிகள்,எல்லோருக்கும் புரியும் படியான உலகமே வியந்த தாக்குதலான கட்டுநாயக்கா தாக்குதலை எடுத்துகொள்வோம். விமான  நிலையம் என்பது எவ்வளவு பரபரப்பும் சன சந்தடியும் நிறைந்தது என்பது ஒரு சிறு குழந்தைக்கும் புரியும். அந்த இடத்தில் ஒரு பொதுமகன் கூட கொல்லப்படாமல் தாக்குதல் நடத்திய உன்னத வீரர்களை கொண்ட கட்டமைப்பா  தீவிரவாத கட்டமைப்பு .....



ஈழத்தில் நடந்த இறுதிகட்ட போரிலும் பிரிகேடியர் தீபன் அண்ணா பிரிகேடியர் விதுசாக்கா , உட்பட முன்னூறு  வரையான உயர் பதவியில் இருந்த  பிரிகேடியர்களும் கேணல்களும் லெப்டினன்  கேணல்களும்,இரண்டாம் லெப்டினன் கேணல்களும்,     கப்டன்களும்,மேஜர்களும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் ஸ்ரீலங்கா படைத்தரப்பால் மனிதாபிமானமற்ற முறையில் உலக நாடுகளே தடைசெய்த எரிவிஷ வாயு குண்டை பாவித்து  அழித்து   ஒரே நாளில்  நம் விடுதலை போராட்டத்தின் திசையை மாற்றி அமைத்த போதும் பன்மடங்கு பெரிய இரணைமடு குளத்தை உடைக்காமல் கல்மடு குளத்தை மட்டும் உடைத்து ஆயிரகணக்கான இராணுவத்தை மட்டும் அழித்த வீர மறவரை கொண்ட கட்டமைப்பா தீவிரவாத கட்டமைப்பு ...



வேற்று மொழி இனத்தவராக இருந்தாலும் தம்மை நம்பி வந்த மக்களிற்கு எந்த விதமான துரோகமும் செய்யாமல் எத்தனை சிங்கள யுவதிகளை திருப்பி அனுப்பி இருப்பார்கள். விடுதலை புலிகளிடம் சிக்கிய அந்த இராணுவ வீரருக்கும் அவர் குடும்பத்துக்கும் மட்டுமே இந்த உண்மைகள் நிச்சயம் தெரிந்து இருக்கும். அவர்கள் பிடியில் சிறையில் இருந்து வெளிவந்த ராணுவத்தில் ஒன்று இரண்டு பேர் மட்டும் துணிச்சலாக இந்த விடையத்தை தொலைக்காட்சிகளில் சொல்லி உள்ளார்கள்.



இது இவ்வாறு இருக்க இறுதி சண்டையில் விடுதலை புலிகள் தமது மக்களை தமது பாதுகாப்பு வேலிகளாக பயன்படுத்தினார்கள் என்பது இன்னுமொரு குற்றச்சாட்டு. நாற்புறமும் உலகின் வல்லரசு நாடுகளின் ராணுவம் புடைசூழ நான்கு லட்சம் மக்கள் அவர்களின் அந்த ராணுவத்தின் பிடியில் சிக்கியிருந்த போதும் இலங்கையின் வருமான வரி திணைக்களத்தின் மீது குண்டு வீசிய விடுதலை புலிகள் சிங்கள மக்கள் செறிந்து வாழும் ஒரு இடத்தில் குண்டு வீசவில்லையே இப்படிபட்ட போர் வரைமுறையையும்,நெறிமுறையும் கொண்ட ஒரு கட்டமைப்பா தீவிரவாத கட்டமைப்பு . இவர்களா தம் மக்களை காவலரணாக   பயன்படுத்தி இருப்பார்கள்? சரியான சாட்சிகள் இல்லாமல் ஒரு புனிதமான கட்டமிப்பின் மீது சேறு பூச முனைவதும் அதில் கிடைக்கும் லாபத்தில் தம்மை வளர்த்து கொள்வதும் தமிழனாக தமிழ் பேசும் எந்தவொரு குடிமகனுக்கும் கேவலம் ....



இறுதியாக என் கருத்தின் படி விடுதலை புலிகளும் அரசாங்கமும் சமாதான நடவடிக்கையில் ஜெனிவா பேச்சு வார்த்தையில் இருந்தபோது விடுதலை புலிகளை தீவிரவாதியின்  பட்டியலில் முதலில்  முத்திரை குத்திய நாடு இந்தியா.அதை பார்த்துவிட்டு அமெரிக்காவும் பிரிட்டனும் வழிமொழிய எல்லா ஐரோப்பிய நாடுகளும் தீவிரவாதியாக விடுதலை புலிகளை பட்டம் சூட்டியது.இதில் சுவிஸ் மட்டும் விதிவிலக்கு.







இப்போது சொல்லுங்கள் விடுதலை புலிகள் தீவிரவாதியா? ஆளும் வல்லரசு நாடுகள் தீவிரவாதியா?



நன்றி 

No comments:

Post a Comment